search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள்"

    • போலீசார் விசாரணை
    • ரூ.13 ஆயிரம் மதிப்புள்ளவை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (வயது 62), என்பதும், மோட்டார் சைக்கிளில் பையில் மறைத்து சுமார் 14 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர்.
    • கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் பாக்கெட், விமல் பான் மசாலா பாக்கெட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
    • புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பஸ் நிலையம் அருகே, தனியார் மதுபான கடையை ஒட்டி, தள்ளு வண்டி பெட்டிக்கடை ஒன்றில்புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கடையை சோதனை செய்த போது அங்கு புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் மதிப்புள்ள 40 புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.

    • 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அவினாசி

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றுஅவினாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அவினாசியை அடுத்து கருவலூரில்உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (வயது 40), குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், வரஞ்வரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உடையநாச்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(45), நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த காசி (48), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊராங்கனி கிராமத்தில் வெங்கடேசன் மனைவி செல்வி(43), ஜவுளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மனைவி கல்யாணி(60), கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(45) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலூர்பேட்டை, வரஞ்சரம் மற்றும் சங்கராபுரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    • வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் நேற்று மாலை வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது முத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது38). இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    திருமங்கலம் நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவசேகர் (57) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சிவசேகரை கைது செய்தனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்

    சிவகங்கை

    திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் சைனாபுரம், டி.புதூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்பனை செய்த சைனாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), டி.புதூர் பகுதியை சேர்ந்த மெஹாராஜிபேகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை புதைகுழி பகுதி அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், புயல் ராமன், நேதாஜி, செல்வம், அழகன் ஆகிய 5பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர்.
    • புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    சென்னை:

    புற்றுநோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 'நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல' என்ற பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

    உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், வாய்ப்புற்று நோய், நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்ட நோய்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 15 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

    உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 13 சதவீதம் புகையிலை பாதிப்பே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புகையிலை பழக்கத்தால் உடல் நலிவுற்று பணித்திறன் பாதிக்கப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமத்தை வழங்கியுள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்திலும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த அது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரைவு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறிய மளிகை கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக்கூடாது. அது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றை மீறி எல்லோருக்குமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே இதை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக்கடை, டீக்கடைகளில் தற்போது உள்ளதை போல் இனிவரும் நாட்களில் இஷ்டத்துக்கு பீடி, சிகரெட் விற்க முடியாது. லைசென்ஸ் பெற்ற கடைகளில் மட்டுமே இனி பீடி, சிகரெட் விற்க அனுமதிக்கப்படும். மேலும் அந்த கடைகளில் பீடி, சிகரெட்டை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்க முடியாது.

    இந்த விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பீடி, சிகரெட் விற்பனையை குறைக்க முடியும். சிறுவர்களிடையே புகைப்பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு தடுக்க முடியும். அதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான உரிமங்களை வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 பாக்கெட்டுகள் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி கிராமத்தில் உள்ள கடைகளில் அவளுர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகி றதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அப் துல்ரகுமான் என்பவரின் மகன் ஆசிக் (வயது 27) என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது 5 பாக்கெட் தடைசெய்யபட்ட ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • மக்களின் நலன் கருதி இது போன்ற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என புகையிலை நிறுவனங்கள் வாதத்தை முன் வைத்தன.

    ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் நலன் கருதி இது போன்ற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள் என்றும் புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு சரிதான் எனவும் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து வந்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

    மேலும் இந்த ஆணையால் பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்களுக்கு வேறு ஏதேனும் நிவாரணம் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் முறையிடவும் புகையிலை நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

    • தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    நாமக்கல்,ஏப்.23-

    பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகி யோர் சின்னார்பாளையம் அருகே, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்மந்தமாக, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விசாரணையில் வடமா நிலத்தை சேர்ந்த வாலி பர்கள் வெப்படை பகுதி யில், வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமு தல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அதனை பதுக்கி வைத்த வட மாநில வாலி பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×